கோவை - சேலம் 'மெமு' ரயில் சேவை இன்று முதல் வரும் 31 தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 

 

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

 

ஈரோடு - சேலம் ரயில் நிலையம் இடையே தண்டவாளம் புதுபிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே மே 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை கோவை - சேலம் 'மெமு' ரயில் (வ.என். 06802) ரத்து செய்யப்படுகிறது.  மறுமார்கத்தில் சேலம்- கோவை ரயில் ( வ.என். 06803)ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.