தமிழ்நாட்டில்  முதன்மை கல்வி அலுவலர்களாகவும் அதற்கடுத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி இன்று  பணியிட மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு.

மொத்தம் 13 முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் கோவையின் முதன்மை கல்வி அலுவலராக செயல்புரிந்த இரா.பூபதி சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்ககத்தின் துணை இயக்குநராக  (நிர்வாகம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராக செயல்பட்டு வந்த எல். சுமதி இங்கு முதன்மை கல்வி அலுவலராக பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.