கரூர் - கோவை 4 வழிச்சாலை பணி எப்போது முடிக்கப்படும் என்பது பற்றி தமிழக  நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமையில் நேற்று (மே 8ம் தேதி) நடைபெற்றது.

 

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:- 

 

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக உள்ளது. ஆனால் வாகன செறிவு அதிகம் உள்ள சாலை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாடு மாநில அரசிடம் இருந்தாலும் நிதி ஒதுக்கீடு மத்திய அரசு செய்ய வேண்டும்.

 

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து கரூர் மாவட்ட எல்லையான வைரமடை வரை 26 கி.மீட்டருக்கு ரூ.137 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் (டெண்டர்) கோரப்பட்டுள்து. கரூர் - கோவை 4 வழிச்சாலை பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும்.



CREDITS : HINDU TAMIL