கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்திருவிழா நாளை (28.2.2024) நடைபெறுகிறது. இதற்காக கோவையில் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து, மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள், செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா, செல்வபுரம் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்லலாம்.

 

வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள், உக்கடம், செல்வபுரம் பைபாஸ், அசோக் நகர் ரவுண்டானா, சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டை அடையலாம்.

 

மருதமலை தடாகம் ரோட்டில் இருந்து காந்திபார்க், மூன்று கம்பம், தெலுங்கு வீதி வழியாக ராஜவீதி வரும் அனைத்து பஸ்களும், காந்திபார்க் வழியாக டி.பி., ரோடு, மெக்ரிக்கர் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சண்முகா தியேட்டர் ரோடு, தேவாங்கப்பேட்டை வழியாக அவிநாசி ரோடு மேம்பாலம் செல்லலாம்.

 

மருதமலை, தடாகம் ரோடு, தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர முடியாது. மாறாக காந்திபார்க், பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், ராமமூர்த்தி ரோடு, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா, வழியாக செல்லலாம்.

 

சுக்கிரவார்பேட்டை ரோட்டில் இருந்து, தியாகி குமரன் வீதி வழியாக ராஜவீதிக்கு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி, வழியாக தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் ரோடு, செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, சொக்கபுதுார், பொன்னையராஜபுரம், காந்திபார்க் வழியாக செல்லலாம்.

 

கனரக, சரக்கு வாகனங்கள், நாளை காலை 8:00 முதல், இரவு, 10:00 மணி வரை மாநகருக்குள் வரக்கூடாது. ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., ஆகிய ரோடுகளில் நாளை, வாகனங்கள் நிறுத்தவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.