ஊட்டியில் சுற்றுலாவை மேம்படுத்த ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

 

வால்பாறை, ஏற்காடு போன்ற இடங்களில் ஹெலிகாப்டர் சவாரி வழங்க சில தனியார் நிறுவனங்கள் விருப்பம் காட்டி உள்ளதாக கூறிய அவர், ஹெலிகாப்டர் சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் பேசியுள்ளதாக நேற்று ஊட்டி வந்த போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

 

மேலும் சுற்றுலாவை மேம்படுத்த ஊட்டி ஏரி மற்றும் பைகாரா ஏரிகளில் சொகுசு வீடாகப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்க படும் படகு வீடு சேவை கொண்டுவர சுற்றுலா துறை ஆலோசித்து வருவதாக கூறினார்.