கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் படி, வரும் வெள்ளிக்கிழமை (27.01.2023)  அன்று, கோவை மாநகரம் முழுவதும், தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மீது, மோட்டார் வாகன சட்டப்படி வழக்குகள் பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு, அன்று முழுவதும் அந்த நபர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பான பயனத்தை உறுதி செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.