சென்னையில் மழை, வெள்ளக் காலங்களில் சிறப்பாக பணியாற்றியிருக்கக்கூடிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

 

 

அமைச்சர்கள் சேகர் பாபு, K.N.நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 

 

 "எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களையெல்லாம் விட, உங்களைப் பாராட்டக்கூடிய இந்த விழாவைத் தான் நான் பெருமையாகக் கருதுகிறேன்," என்று முதலமைச்சர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

நிகழ்வின் இறுதியில் உணவு பரிமாறப்பட்டது. தூய்மை பணியாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து முதலமைச்சர் உணவருந்தும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.