கோவையில் பழமையான சினிமா தியேட்டர்களில் ஒன்றான சென்ட்ரல் - கனகதாரா தியேட்டர்களை பிராட்வே குழுமம் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மொத்தம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த  தியேட்டர் வளாகம் 1950ல் ராமசாமி நாயக்கர் என்பவரால் துவங்கப்பட்டது. சில காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இது மூடப்பட்டது. 

மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரையரங்கம் இருந்த இடத்தில் பிராட்வே குழுமம் மீண்டும் ஒரு திரையரங்கையோ அல்லது ஒரு பிரமாண்ட ஷாப்பிங் மால்-லையோ கொண்டுவரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பெடரல் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடனை தியேட்டர் உரிமையாளர் தரப்பில் செலுத்தாமல் இருந்ததால், தியேட்டரை வங்கி கையகப்படுத்தி இருந்த நிலையில், அண்மையில் நடந்த வங்கி ஏலத்தில் இந்த வளாகத்தை பிராட்வே குழுமம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.