13 ஆண்டுகளாக கோவை மாநகராட்சியின் 86வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில், இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் அங்கு சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. 

டவுன் ஹாலில் அமைந்துள்ள கோவை மாநகராட்சி வளாகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்பு  86வது வார்டு பகுதி மக்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களிடம் வசூலிக்கும் வரிப்பணத்தில் தங்களுக்கே அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுப்பதில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அங்குவந்து அவர்களை சமரசம் செய்தனர்.