தற்போது கோவை என்று நாம் அழைக்கும் நிலப்பரப்பில் கி.மு. 10,000 முதல் 500 ஆண்டு வரை இருந்த பண்டை கால சிற்பங்கள், பானைகள், கல்லால் ஆன பொருட்கள், கல்வெட்டுக்கள் என பலவும் மீட்டெடுக்கப்பட்டு கோவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

1990ல் உருவான இந்த அருங்காட்சியகம், 2009 முதல் கோவை நேரு ஸ்டேடியம் வர்த்தக வளாகத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது.இது  விரைவில் கோவை காந்திபுரம் பகுதியில் உருவாகி வரும் செம்மொழி பூங்கா வளாகத்தில் தனியிடம் பெற்று செயல்பட உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கான அரசாணை கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு அருங்காட்சியகங்களின் இயக்குனர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் 3600 சதுரடி நிலத்தில் இந்த அருங்காட்சியகத்தின் நிரந்தர வளாகம் அமைகிறது.

கோவையின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் எடுத்து சொல்லும் விதமாக உள்ள 1500 பண்டைக்கால பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இது கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் ஒரு நிரந்தர மையத்தில் அமையும் போது இதன் மதிப்பை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டிப்பாக பார்த்து உணருவார்கள்.

அட்டை படம்: கோவை நகரிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள குமிட்டிபதி கிராமத்தில் கண்டறியப்பட்ட 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் - FLIKR