குண்டு குழிகளால் பரிதாப நிலையில் இருந்த காந்திமா நகர் பகுதியின் பிரதான சாலை தற்போது சீரமைப்புகள் பணிகள் நடைபெறுவதால் முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

பீளமேட்டில் இருந்து கணபதி, சரவணம்பட்டி போன்ற பிற பகுதிகளுக்கு செல்ல காந்திமா நகர் பிரதான சாலை ஒரு முக்கியமான இணைப்பு பகுதியாக உள்ளது. இது கோவை மாநகராட்சி வார்டு எண்.26-க்குட்பட்ட பகுதி.

24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் இருந்த இடங்கள் கோவை காந்தி மாநகரில் ஏராளம் உள்ளன.
இந்த சாலையில் இருந்த குண்டுகுழிகளால் அதில் பயணிப்பது மிகுந்த சிரமத்தை வாகனஓட்டிகளுக்கு ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் வார்டு எண்.26-க்குட்பட்ட இந்த சாலை உடன் 39 எண்ணிக்கையிலான சாலைகளை ரூ. 2 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினை கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஜூன் 2025ல் துவக்கி வைத்தார்.
காந்திமா நகர் பிரதான சாலை பணிகள் துவங்கி ஜூலை மாதம் 15 தேதியில் 50% நிறைவு பெற்றது. சாலையின் சரிபாதி  பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது.

மீதம் உள்ள இடங்களில் இருந்த சிறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கும் தற்போது சாலைகள் அமைக்கும் பணிகள் துவங்கி வருகிறது.

இதனால் அந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயம், இப்போது போடப்படும் சாலை 1-2 ஆண்டுக்குள் மீண்டும் தோண்டப்படாமல் இருக்கவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.