கோவை மாவட்டம் பேரூர் வட்டம் மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு செவ்வாய், ஞாயிறு, சஷ்டி, கிருத்திகை மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பக்தர்கள் தங்களது வாகனங்களில் அடிவாரத்திலேயே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது மலை மேல் 4 சக்கர வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அடிவாரத்தில் அதனை முறைப்படுத்தும் விதமாக பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் புக்கிங் மூலம் பதிவு செய்யும் முறையில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களையும் மதியம் 1 மணி முதல் 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களையும் மட்டும் அனுமதிக்கலாம் என அறங்காவலர் குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் கீழ்காணும் திருக்கோயில் முகவரியில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கருத்து தெரிவிக்க 0422 2422490 என்ற எண்ணை பயன்படுத்தலாம்.
இ பாஸ் பற்றியும் கருத்து தான் கேட்கப்படுகிறது!
மருதமலை முருகர் கோவிலுக்கு வர இ பாஸ் கட்டாயம் இல்லை. பக்தர்கள் எப்போதும் போல வரலாம். பக்தர்களிடம் இதுகுறித்து கருத்து மட்டுமே கேட்கப்பட்டுள்ளது. இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. அனைவரது கருத்துக்களை கேட்ட பின்பு தான் இறுதி செய்யப்படும்.
PC: Ramesstudios/Instagram
மருதமலை கோவிலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் இல்லை! பக்தர்கள் எப்போதும் போல வரலாம் - கோவில் நிர்வாகம்
- by David
- Sep 28,2024