தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்களில் கோவை மண்டலத்தில் மட்டும் 58,000க்கும் அதிகமானவர்கள் 12 kW க்கும் குறைவான மின் இணைப்பு பெற்ற்றவர்கள்.

மின்சார வாரியத்துக்கான மின்கணக்கீட்டாளர் கடந்த மாதம் மின்பயன்பாட்டுக்கான கட்டணத்தை கணக்கிடும் போது ரூ.2000 வரை மின்சாரத்தை பயன்படுத்திய குறுந்தொழில் நடத்தி வரும் தொழில் முனைவோர்களுக்கு அபராத தொகையாக (பவர் பேக்ட்) காரணம் காட்டி 150% சதம் வரை விதித்து உள்ளனர்.

அது எப்படி? எதற்காக?

கடந்த 14.9.2024 தேதியில் 3 kWக்கு மேல் LT CT மற்றும் கமர்சியல் மின்சாரத்தை பயன்படுத்துவர்களுக்கு 'பவர் பேக்ட்' அடிப்படையில் அபராதம் விதிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதின் அடிப்படையில் 1.7.2024 தேதியில் இருந்து மின் மீட்டரில் காட்டப்படுகின்ற மின் சேதரத்தின் அடிப்படையில் அபராத தொகையுடன் வசூலிப்பதற்கு அனுமதி இருப்பதால் முன் தேதியிட்டு அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

அதிர்ச்சியில் குறுந்தொழில்முனைவோர்கள்

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் தங்களின் இணையதளத்தில் வெளியீட்டு  இந்தக் கட்டணத்தை உயர்த்தி இருப்பது தொழில் முனைவோர்கள் மத்தியிலும் கமர்சியல் இணைப்பு பெற்று கட்டணத்தை கட்டுபவர்கள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என பாதிக்கப்பட்ட குறுந்தொழில்முனைவோர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

அபராதத்தை நிறுத்த கோரிக்கை

உடனடியாக இந்த அபராத விதிப்பை நிறுத்துவதுடன் அபராதமாக வசூலித்த தொகையினை சம்மந்தப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு திருப்பி  தரவேண்டும் என்று கோவை மாவட்ட தலைமை மின் பொறியாளர் குப்பு ராணியிடம் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ( FEDERATION OF COIMBATORE INDUSTRIAL ASSOCIATIONS - FOCIA) சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த செவ்வாய் (23.9.2024) அன்று கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.

என்ன நடவடிக்கை?

மனு கொடுத்து 4 நாட்கள் ஆகிய நிலையில் அதுபற்றி என்ன நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என FOCIA தரப்பில் இன்று தலைமை மின் பொறியாளரிடம் நேரடியாக கேட்கப்பட்டது. அப்போது தலைமை மின் பொறியாளர், இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் தான் எதுவும் செய்ய முடியாது எனவும், இதற்கு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தின் மூலமோ அல்லது ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலமாகவோ தான் தீர்வு தேட கூடிய சூழல் உள்ளதாக கூறியுள்ளார். இது சம்மந்தமாக அரசு தீர்வு வழங்கும் வரை அபராதம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றை செலுத்தித்தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக FOCIA தரப்பில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்:-

தமிழகத்தின் மின்சார வாரியத்தின் தலைவர், ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் மின்சார துறை அமைச்சரும் இந்த விஷயத்தில் தலையிட்டு முழுமையாக விதிக்கப்பட்ட அபராத தொகையை திரும்ப வழங்க வேண்டும்.

மின் சேமிப்புக்கான  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மின் சேதாரத்தை தவிர்ப்பதற்கு வழிகாட்டிய  பிறகு மின்சார பராமரிப்பில் சேதாரம் ஏற்படுமானால் அபராதம் விதிப்பது முறையாக இருக்கும். இவ்வாறு FOCIA  சார்பில்  மாவட்ட தலைமை மின் பொறியாளரிடம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த பிரச்சனையை மின்சார ஒழுங்குமுறை ஆணைத்திடமும் மின்சார வாரியத்தின் தலைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.