கோவை மாநகரில் உள்ள பெரும் வர்த்தக பகுதிகளில் ஒன்றான பெரியகடை வீதி பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

 

தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த செருப்பு கடையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கடையில் பிடித்த தீ வேகமாக அதன் அருகில் இருந்த பிற கடைகளுக்கும் பற்றியது. இதனால் கரும் புகை மூட்டம் எழுந்தது.

 

சம்பவத்தின் தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு பிரிவினர் அங்க வேகமாக வந்து தீயை அணைக்க முயன்றனர். இந்த விபத்தால் 5க்கும் மேற்பட்ட கடைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.