கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது 'தி கேரள ஸ்டோரி' படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசுகையில், " தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரளா ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்த படத்தை தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு ஆதரவளிக்கிறது" என கூறியுள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான முதலே இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த படம் இன்று வெளியான பல இடங்களில் இஸ்லாமிய அமைப்பினர் திரையரங்கை முற்றுகை இட முயன்றுள்ளனர்.இதனால் காவலர்கள் மற்றும்  எதிர்ப்பாளர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.