கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை வேண்டுமென பல காலமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சேவையை வழங்க இண்டிகோ விமான நிறுவனம் முன்வந்து அனுமதியை பெற்று சேவையை சென்ற மாதம் 10 ஆம் தேதி ஆரம்பித்து வைத்து.
இதற்கு பொதுமக்களிடம் மிகுந்த ஆ. 186 பேர் அமரக்கூடிய ஏர்பஸ் A 320 விமானத்தில் கோவையில் இருந்து அபுதாபி செல்லும் போது 93% பயணிகளும், அபுதாபியில் இருந்து கோவை வரும் விமானத்தில் 57% பயணிகளும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் 2025 வரைக்கான குளிர்கால அட்டைவனையில் இந்த சேவை இடம்பெறாமல் இருந்தது. இந்த சேவை தொடர்வதில் சிக்கல் உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இன்று மார்ச் 2025 வரைக்கான இந்த சேவையின் முன்பதிவை இண்டிகோ நிறுவனம் இன்றும் மீண்டும் துவக்கி வைத்தது.
மார்ச் 2025 வரை கோவை - அபுதாபி விமான சேவைக்கான முன்பதிவை துவக்கியது இண்டிகோ நிறுவனம்!
- by David
- Sep 17,2024