கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 10.02.2024 அன்று காலை 8 மணியளவில் கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் 17.02.2024 அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐடி துறை ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டமுன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 10,000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர்.

எட்டாம் வகுப்பு, பத்தாம்வகுப்பு, பன்னிரண்டாம்வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள். செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.

இம்முகாமிற்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம்(Bio-data) மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், அனுமதி முற்றிலும் இலவசம். இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும்.

இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மற்றும் வேலை நாடும் மனுதாரர்கள் https://forms.gle/1NKiQzXVtj4bkvAPA என்ற லிங்கிலும் விவரங்களைப் பதிவு செய்தல் அவசியம்.

மேலும் தகவல்களுக்கு 9499055937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் 6 மணி வரை அழைக்கலாம்.