கோவை மாநகரில் ஒண்டிப்புதூர் பகுதியில் சிறைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் உலக தரம் கொண்ட  கிரிக்கெட் ஸ்டேடியத்தை அமைக்க தமிழக அரசின் விளையாட்டு துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

ஒண்டிப்புதூர் திறந்த வெளி சிறை அமைந்துள்ள இடத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதால் அந்த இடத்தில் உள்ள நிலத்தை விளையாட்டு துறைக்கு மாற்றி தர கோவை மாநகராட்சியிடம் வருவாய்த்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல் படி, இதற்கான மொத்தம் நிலத்தேர்வு 30 ஏக்கர் எனவும், இதில் மைதானம் 20.18 ஏக்கர் நிலத்தில் அமையும் எனவும், 10.18 ஏக்கரில் பல்லடுக்கு கொண்ட கார் நிறுத்துமிட வசதிகள் அமையும் எனவும் தெரியவருகிறது. மேலும் உள்ள இடங்களில் பயிற்சிக்கான பிட்ச் மற்றும் மைதானம், ஜிம்நாசியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்களும் அமையும்.