ஹிந்தியில் நடிகர் சன்னி தீயால், ரந்தீப் ஹூன்டா மற்றும் ரெஜினா கசான்ட்ரா நடித்து வெளிவந்துள்ள 'ஜாட்' எனும் திரைப்படத்தில் தமிழ் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்களை இழிவாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் திரையிடப்பட்ட கோவை ப்ரோசோன் மால் வணிக வளாகத்தில் 'நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தினால் அந்த வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டால் தியேட்டர் திரை கிழிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.