அரசு பள்ளிக்கு அனைத்து வசதிகளையும் கொண்ட 4 புதிய வகுப்பறைகளை வழங்கிய ரவுண்ட் டேபிள், லேடீஸ் சர்க்கிள் அமைப்புகள்
- by David
- Jul 22,2025
கோவை மாவட்டம் கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் ரூ. 44 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளையும் கொண்டு 4 புதிய வகுப்பறைகளை கோவை நார்த் ரவுண்ட் டேபிள் 20 மற்றும் கோவை நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 ஆகியோர் இணைந்து அமைத்துக் கொடுத்துள்ளனர்.
கல்வி மூலம் சுதந்திரம் (Freedom Through Education) எனும் கொள்கையின் அங்கமாக RTIT மற்றும் RTIF எனும் பிரிவு மானியங்கள் மூலமாக இந்த வசதிகள் வழங்கப்பட்டன.
ரவுண்டு டேபிள் இந்தியா ஏரியா 7 தலைவர் ரகுலன் சேகர், கிருஷ்ணகுமார், வித்யாதரன்; கோவை நார்த் ரவுண்ட் டேபிள் 20 தலைவர் அருண் குணசேகரன் மற்றும் கோவை நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 தலைவர் சிவகாமி அருண் நாகப்பன் மற்றும் அவர்களது குழுவினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த 4 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்த நன்கொடையாளர்களுக்கும் RTIT மற்றும் RTIF மானியங்களுக்கு கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கௌரிநாயகி மற்றும் ஆசிரியர்களும் அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் நன்றி தெரிவித்தனர்.