கோவையில் வரும் ஆகஸ்ட் 3ல் திருவாசகம் முற்றோதல் பெருவிழா
- by CC Web Desk
- Jul 31,2025
நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் வரும் ஆகஸ்ட் 3, 2025ல் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் 'திருவாசகம் முற்றோதல் பெருவிழா' நடைபெறவுள்ளது.
இதை சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட நிறுவனர் தாமோதரன் மற்றும் சிவத்துறவி ராஜம்மாள் சங்கரன் நிகழ்த்துகின்றனர்.
காலை 7:30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், சிரவை ஆதினம் ராமானந்த குமரகுருபர ஸ்வாமிகள்; தென்சேரி ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார்; காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர்; பிற ஆதீனங்கள்; மடாதிபதிகள்; சாதுக்கள்; சன்னியாசிகள்; ஓதுவார்கள் மற்றும் அருளாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்வில் விருப்பமுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கேட்டுகொள்ளப்படுகின்றனர்.