அருட்செல்வர் மகாலிங்கம் அய்யாவை பெருமைப்படுத்த தமிழக அரசு திட்டம்!
- by David
- Feb 06,2025
தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகளில் ஒருவர் பொள்ளாச்சியை சேர்ந்த அருட்செல்வர் மகாலிங்கம். தொழில்த்துறை, கல்வி, விவசாயம், அரசியல், ஆன்மிகம் என சகல துறைகளிலும் சாதனை செய்து காட்டிய பெரும் தலைவர் ஆவார். அவருக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செய்யப்படவுள்ளது இன்று தெரியவந்தது.
தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களில் சமுதாய மேம்பாட்டுக்காக உழைத்த அத்தனை பேருக்கும் தமிழக அரசின் சார்பாக சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் 'அருட்செல்வர்' மகாலிங்கம் அவர்களின் பெயரில் ஒரு சாலையையும் அவருக்கு ஒரு சிலையையும் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்பதை இன்று கோவை வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் மூலமாக குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை; உலகத் தமிழ்ச் சங்கம் -மதுரை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் இணைந்து நடத்திய நிகழ்வின் போது இதை அவர் தெரிவித்தார்.