அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் 25 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 35 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 20 முகாம்கள், கிராம ஊராட்சிகளில் 36 முகாம்கள் புறநகா் ஊராட்சிகளில் 4 முகாம்கள் என மொத்தம் 120 முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது.

இந்த திட்டம் மூலம் சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு  அரசு அலுவலர்களே நேரடியாக மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முகாம் நாளை கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 4 மற்றும் 10 பகுதிகளை சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ். எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.