கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி நதிக்கரையில் பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் அனைத்து இந்து சமுதாய நந்தவனம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும் என மக்களால் நம்பப்படுகிறது.

இன்று ஆடி அமாவாசை என்பதால் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள் அதிகாலை முதலே இந்த நந்தவனத்தில் காத்திருந்து பவானி நதிக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஒரு தகவல் படி10 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கூடியிருக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.