கோவை, திருப்பூர் மாவட்டங்களில் களப் பணிகளை ஆய்வு செய்ய நாளை (22.7.25) மற்றும் நாளை மறுநாள் முதலமைச்சர் வருகை தருவதாக திட்டமிடப்பட்ட நிலையில் அவருக்கு லேசாக தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயண நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.