அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு - கோவை கலெக்டர் அறிவிப்பு
- by CC Web Desk
- Jul 21,2025
திட்டமில்லாத பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைபடுத்த வழங்கப்பட்ட வாய்ப்பு காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் கூறியதாவது :-
திட்டமில்லா பகுதிகளில் 1.1.2011 எனும் தேதிக்கு முன் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைபடுத்தும் திட்டத்தின்கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 1.7.2025 முதல் 30.6.2026 வரை ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டிடங்கள் மலையிடப் பகுதியில் அமையும் பட்சத்தில் அரசு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in எனும் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.