கோவை மாநகரில் வானிலை மாற்றத்தை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்
- by David
- Jul 26,2025
Coimbatore
கோவை மாநகரில் கடந்த 1 வாரமாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்துவருகிறது. வெயிலுக்கான சூழல் குறைந்து, மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசுவதை மக்கள் அனுபவித்து வருகின்றனர். அடுத்த வாரமும் (27.7.2025 முதல் 2.8.2025) எதிர்பார்க்கலாமா என்ற கேள்வி பொது மக்கள் பலரிடம் உள்ளது.
இதுபற்றி கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
கடந்த வாரம் கோவை மாநகரில் நிலவிய சாரல் மழை சூழல் ஞாயிறு வேண்டுமானால் நீடிக்கலாம். அதை தொடர்ந்து வரும் வாரம் திங்கள் முதல் தொடர வாய்ப்பில்லை. திங்கள் முதல் லேசாக வெப்பம் அதிகரிக்கக்கூடும். சாரல் மழை சூழல் அப்படியே படிப்படியாக குறையும். காற்று மிதமான அளவில் வீசும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் வரக்கூடிய வாரத்தில் வானிலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என தெரியவருகிறது.