ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு ஒத்திகை
- by CC Web Desk
- Jul 26,2025
Coimbatore
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் கோவை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி கல்லூரியில் காவலர்கள் பிரிவில் பணியாற்றும் வீரர்களுக்கு இன்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
சுமார் 90வீரர்களுக்கு 10 பயிற்சியாளர்கள் ஆழியாறு அணை பகுதிக்குள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி வழங்கினர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக அணை பகுதியில் முறையாக நீந்த தெரியாத 4 பேர் தண்ணீரில் சிக்கிக்கொண்டது போல செயற்கையாக நடித்தனர். அப்போது அவர்களை மீட்க எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ அதை ரிசர்வ் படையினர் செய்தனர்.
இவ்வாறு மீட்கப்படும் நபர்களை எப்படி ஆசுவாசப்படுத்துவது, எப்படி தேவைப்படுவோருக்கு முதலுதவி வழங்குவது என்பதை அவர்கள் செய்து காட்டினர். இத்துடன் பல மீட்பு நடவடிக்கைகளை அவர்கள் செய்து, தங்கள் மீட்பு திறன்களை வலுப்படுத்திக்கொண்டனர்.