தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (26) ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நாட்டில் ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை இயற்றவேண்டும் என்ற வேண்டுகோள் பல காலமாக உள்ள நிலையில் இதுபற்றி இன்று கோவை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டப்பேரவை குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஆணவ படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டுவர அரசு தயாரானது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் 11 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்தியில் உள்ள அரசு மறுக்கிறது. எனவே விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என கூறினார்.