கோவை போத்தனூர் வழியே சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு
- by David
- Sep 29,2025
சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியே சிறப்பு ரயில்சேவை சென்னை எக்மோர் - திருவனந்தபுரம் (வடக்கு) ரயில் நிலையங்கள் இடையே 30.9.25- 1.10.2025 மற்றும் 5.10.25-6.10.25 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது.
வண்டி எண். 06075 சென்னை எக்மோர் - திருவனந்தபுரம் (வடக்கு) சிறப்பு ரயில் 30ம் தேதி இரவு 10.15 மணிக்கு சென்னை எக்மோரில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் (1.10.25) காலை 6.05 மணிக்கு கோவை போத்தனூருக்கு வந்து, பின்னர் மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் (வடக்கு) ரயில் நிலையத்தடையும்.
பின்னர், 5.10.25 அன்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரம் (வடக்கு) ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், 6.10.25 நள்ளிரவு 1.28 மணிக்கு கோவை போத்தனூர் வந்து, காலை 10.30 மணிக்கு சென்னை எக்மோர் நிலையம் வந்து சேரும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Pc: Lens Through Justin/Instagram