கோவை மாநகரத்தில் இன்று (29.9.25) முதல் வரும் வியாழன் (2.10.25) வரை வறட்சியான வானிலை சூழல் நிலவ வாய்ப்புள்ளது.

காற்று வீசுவது நாளை (30.9.25) முதல் குறையக்கூடும். இதனால் வெப்பம் அதிகமாய் இருப்பது போல மக்கள் உணரக்கூடும். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை வெப்பசலன மழையை கோவை மாநகரில் உள்ள மக்கள் எதிர்பார்க்கலாம். இதே சூழல் அடுத்த வாரமும் கூட நீடிக்கலாம்.

நன்றி : சுஜய், வானிலை ஆய்வாளர், கோவை