சபரிமலை பண்டிகை கால சிறப்பு ரயில் கோவை வழியே புதன்கிழமைகள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே
- by David
- Dec 12,2023
சபரிமலை பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹைதராபாத் - கோட்டையம் சிறப்பு ரயில் (07167) கோவை வழியே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை டிசம்பர் 12ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 24 ஆம் தேதி வரை உள்ள செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இயக்கப்படும்.
இந்த ரயில் செவ்வாய்க்கிழமை மதியம் 12:25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 5:45 மணிக்கு ஜோலார்பேட்டை வந்து சேரும். அங்கிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வந்த பின்னர்
காலை 9: 58 மணிக்கு கோவை ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அதன் பின்னர் மாலை 4:40 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்திற்கு இறுதியாக வந்து நிற்கும்.
கோட்டயத்தில் இருந்து புதன்கிழமை இரவு 8:45 மணிக்கு புறப்பட்டு, வியாழன் நல்லிரவு 2:28 மணி அளவில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து நிற்கும். பின்னர் அங்கிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை சென்று பிறகு ஹைதராபாத் செல்லும்.